பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்திற்கு செய்வதற்காக அவருக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம் தர ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் - சுசன்னேவுக்கும்  திருமணம் வெகுவிமரிசையாக மும்பையில் நடந்தது. இவர்களுக்கு 7வயது ஹிரே கான் மற்றும் 5 வயது ஹிருதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனின் பிறந்த நாள் விழாவின் போது ஹிருத்திக் ரோஷனுக்கு அவரது மனைவி சுசன்னேவுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஹிருத்திக் ரோஷனின் எந்த நிகழ்ச்சிகளிலும் மனைவி சுசன்னே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக பரவலாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துகூறிய ஹிருத்திக் ரோஷன், தங்களது 17 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் மனைவி சுசன்னேவை விட்டு பிரிய தான் முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் அர்ஜூன் ரம்பாவும் ஹிருத்திக் மனைவி சுசன்னேயும் நெருக்கமாக பழகுவதாகவும் செய்திகள் வெளிவந்தன

இதையடுத்து, ஹிருத்திக் ரோஷன் - சுசன்னே இருவரும் சட்டப்படி பிரிய முடிவு செய்தனர். விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க சுசன்னே ஹிருத்திக்கிடம் ரூ.400 கோடி ஜீவனாம்சம் கேட்டார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஹிருத்திக் ரூ.380 கோடி தர ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் சட்டப்படி பிரிந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Post a Comment

 
Top