இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தனது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 'தி ரோஸ் பவுல்" மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 163.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 569 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. குக் 95 ரன்களும், பாலன்ஸ் 156 ரன்களும், பெல் 167 ரன்களும், பட்டர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும் குவித்தனர். இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுக்களும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களும், ஷமி, ரோஹித் சர்மா தலா விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முரளிவிஜய் 11 ரன்களுடனும், புஜாரா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 544 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ள இந்தியா ஃபாலோ ஆனை தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment