பார்த்திபன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி வெளிவர இருந்த 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படம் திடீரென தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.


ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் கவுரவ வேடத்திலும், புதுமுகங்கள் முக்கிய வேடத்தில் நடித்து ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 1 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலையில்லா பட்டாதாரி நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதால் கூடுதல் தியேட்டர்கள் நேற்றுமுதல் அந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 1ல், ஜிகர்தண்டா, ரிலீஸாவதாலும், ஆகஸ்ட் 15ல் சூர்யாவின் அஞ்சான் ரிலீஸாக இருப்பதாலும், பார்த்திபனின் படத்தை தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் அனேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகும் என தெரிகிறது. ஆனாலும் செப்டம்பரில் ஏற்கனவே பன்னிரெண்டு படங்கள் ரிலீஸாக இருப்பதால் கடும்போட்டியைத்தான் பார்த்திபன் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Post a Comment

 
Top