லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பிசியான சாலையில் நிர்வாணமாக சென்ற நபர் ஒருவரை விரட்டி பிடிக்க சென்றபோது, அந்த நபர் எதிர்பாராதவிதமாக போலீஸ் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் Jefferson Park என்ற பகுதியில் நேற்று இரவு 10.20 மணியளவில் ஒரு மர்ம நபர் நிர்வாணமாக சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனடியாக நான்கு வாகனங்களில் போலீஸார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீஸ் வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டதும் அந்த நிர்வாண நபர் தெருக்களின் குறுக்கே ஓடி தப்பிக்க முயன்றார். இந்த வேளையில் எதிர்பாராத விதத்தில் ஒரு போலீஸ் வாகனம் அவர் மீது திடீரென மோதியது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்து செய்தியாளர்களிடம் பேசிய Lt. Andy Neiman, a department spokesman என்பவர், "விபத்தில் இறந்த நபர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணம் அடைந்த நபருக்கு 50 முதல் 60 வயது வரை இருக்கும். மேலும் அவர் எதற்காக நிர்வாணமாக தெருக்களில் திரிந்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். இந்த விபத்து காரணமாக Jefferson Park பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

Post a Comment

 
Top