சீனாவில் ஆப்பிள் ஐபோனை சார்ஜில் போட்டுவிட்டு அதை தலையணைக்கடியில் வைத்து தூங்கிய 18 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார். அவர் மின்சாரம் தாக்கப்பட்டு பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


சீனாவில் உள்ள Xinjiang என்ற பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆப்பிள் ஐபோனை சார்ஜில் போட்டுவிட்டு அதனுடன் ஹெட்போனை இணைத்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் அவருடைய சகோதரி வீட்டிற்கு வந்த பார்த்தபோது படுக்கையில் தனது சகோதரி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரருகில் இருந்த ஆப்பிள் ஐபோன் 4S எரிந்த நிலையில் இருந்தது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த காவல்துறையினர் சார்ஜில் இருந்த ஆப்பிள் ஐபோனில் இருந்து மின்சாரக்கசிவு ஏற்பட்டு இளம்பெண்ணை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அந்த இளம்பெண் ஆப்பிள் ஐபோனின் ஒரிஜினல் சார்ஜருக்கு பதிலாக வேறு விலைகுறைந்த சார்ஜரை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து சீன போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்துக்கு தங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் நஷ்ட ஈடு தரவேண்டும் என பலியான இளம்பெண்ணின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

 
Top