இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களின் 93 வயது கணவரின் உதவியாளர் மீது செக்ஸ் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களின் கணவர் மன்னர் பிலிப். இவரிடம் பெஞ்சமின் ஹெர்மான் என்றா 79 வயது நபர் ஒருவர் உதவியாளராக பணிபுரிந்தார். இவர் கடந்த 1971 முதல் 1974 வரை மன்னர் பிலிப்பின் உதவியாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

ராணியின் அரண்மனையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அந்த சிறுமி கடுமையான மனநிலை பாதிப்புக்கு உள்ளானதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை இங்கிலாந்தில் உள்ள கிரெளன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சம்பவத்தன்று பெஞ்சமின் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டதாகவும், அந்த விழாவில்தான் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டது.எனவே அவருடைய டைரியின் மூலம் அவர் அந்த விழாவில் கலந்துகொண்டாரா என்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

 
Top