இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 266 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் எம்.எம்.அலி மிக அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



இங்கிலாந்துக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று இந்தியா 333 ரன்கள் எடுத்தால் வெற்றி நிலையில் களம் இறங்கியது. கைவசம் ஆறு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 67 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுக்களையும் இழந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 178 ரன்களே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற சமநிலையில் தொடர் உள்ளது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


ஸ்கோர் முழுவிபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்    569/7 163.4 ஓவர்கள்

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்    205/4  40.4 ஓவர்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ்        330/10  106.1 ஓவர்கள்

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்    178/10  66.4 ஓவர்கள்

Post a Comment

 
Top