பத்து ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் முதன்மை வர்த்தக அதிகாரியாக பணியாற்றிய நிகேஷ் அரோரா, அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகிய நிகேஷ் அரோரா, ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட் வங்கியின் துணைத்தலைவராக பணியாற்றப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிகேஷ் ஒரு நிர்வாகியாக மட்டுமின்றி எங்கள் நிறுவனத்தின் அனைவருக்கும் நல்ல ஆலோசகராகவும் இருந்தார். அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அவருடைய விலகல் உண்மையிலேயே எங்களுக்கு பெரிய இழப்புதான் என்று லாரிபேஜ் மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த நிகேஷ் அரோரா, வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பட்டம் படித்தவர். இவர் ஏற்கனவே Deutsche Telekom, Putnam Investments and Fidelity Investments ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.மேலும் டி.மொபைல் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களில் தலைமை வர்த்தக அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு கூகுளில் பணிக்கு சேர்ந்த நிகேஷ், கடந்த பத்து வருடங்களாக அந்த நிறுவனத்தில் பல்வேறு பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
Technology
» 10 வருடங்களாக பணியாற்றி வந்த கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா விலகல்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment