பொதுவாக இரட்டைக்குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகளை அடையாளம் காண்பதில் மற்றவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். ஆனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மிக எளிதில் குழந்தைகளின் வித்தியாசத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் போலந்து நாட்டில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு பெண்ணுக்கு தன்னுடைய மூன்று குழந்தைகளின் வித்தியாசத்தை காண முடியாமல் திணறுகிறார்.
போலந்து நாட்டை சேர்ந்த Karen மற்றும் Ian Gilbert, தம்பதிகளுக்கு சமீபத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அச்சு அசலாக மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அந்த குழந்தைகளை அதன் பெற்றோர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. எந்த குழந்தைக்கு பால் கொடுத்தோம், எந்த குழந்தைக்கு கொடுக்கவில்லை, எந்த குழந்தைக்கு குளிப்பாட்டி டிரஸ் மாற்றினோம் என்று புரியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் குழந்தையின் தந்தை ஒரு வித்தியாசமான யோசனையை தனது மனைவிக்கு கொடுத்தார். அந்த யோசனையின்படி மூன்று குழந்தைகளின் நகங்களிலும் மூன்று வெவ்வேறு நிறங்களில் நெயில் பாலீஷ் போட்டு குழந்தைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தனர். இந்த மூன்று குழந்தைகளுக்காக வாரந்தோறும் 84 பாட்டில்கள் பால் மற்றும் 120 nappies என்று கூறப்படும் குழந்தைகளின் ஆடைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பெற்றோர்கள் கூறினர்.


Post a Comment