சீனாவில் உள்ள ஒரு இளைஞர், நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நாய் கடித்ததால் துண்டான ஆணுறுப்பை சீன டாக்டர்கள் குழு ஒன்று ஆறு மணிநேரம் போராடி சர்ஜரி செய்து மீண்டும் ஒட்ட வைத்துள்ளனர்.


சீனாவில் உள்ள Guangdong Province என்ற பகுதியை செர்ந்த Mr Yang என்பவர் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு தனது நண்பர் ஒருவரிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் mastiff என்ற நாய் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென  Mr Yang அவர்களின் ஆணுறுப்பை mastiff கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால்  Mr Yang வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்களை Mr Yang அவரகளையும் அவருடைய துண்டான ஆணுறுப்பையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் Liao Guolong அவர்கள் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்தது. சுமார் ஆறுமணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர் Liao Guolong அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  Mr Yang அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அவருடைய நண்பர் தன் நாயுடன் தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிப்பதற்காக போலீஸ் தேடி வருகிறது.

Post a Comment

 
Top