நமோ என்ற பெயரில் ஆண்டிவைரஸ் ஒன்றை உருவாக்கி அதை அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கியுள்ளது டெல்லியில் உள்ள இன்னோவேஷன் என்ற ஐ.டி.நிறுவனம். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி நமோ என்ற பெயரை தனது புதிய கண்டுபிடிப்புக்கு வைத்துள்ள இந்த நிறுவனம்தற்போது பேசிக் வெர்ஷன் மட்டும் வெளியிட்டுள்ளதாகவும்விரைவில் அட்வான்ஸ் வெர்ஷன்கள் வெளியாகும் என்றும் இன்னோவேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோர் பணம் செலுத்தி ஆண்டிவைரஸ் வாங்குவதில்லை என்றும் அதனால் அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் விரைவில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்றும்இந்த பிரச்சனையை சரிசெய்யவே தாங்கள் இலவச ஆண்டிவைரஸை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த பெயருக்கும் பிரதமருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் இந்த பெயர் தற்செயலாக வைக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டிவைரஸில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட மற்ற ஆண்டிவைரஸ்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இருப்பதாகவும், இதை பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக செயல்படும், தங்கள் நிறுவனத்தின் பெயர் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவே இலவசமாக தருவதாகவும் இன்னோவேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிவைரஸை https://www.namoav.com/ என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Post a Comment

 
Top