ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'நெருங்கி வா முத்தமிடாதே'. இந்த படத்திற்கு ஹீரோவை செலக்ட்ச் செய்த தனது வித்தியாசமான அனுபவத்தை அவர் பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறும்போது, "தனது படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் இந்த படத்திற்கு பொருத்தமான ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களுக்கு நடிகர்களை தேர்வு செய்யும்படி கூறியிருந்தேன். சில நாட்கள் கழித்து வில்லன் கேரக்டருக்கு ஒரு இளைஞனை என்னிடம் அனுப்பினார். ஆனால் அந்த இளைஞர் எனது படத்தின் ஹீரோவுக்கு பொருத்தமானவர் என என் மனதிற்கு பட்டதால் உடனே அவரை ஹீரோவாக்கிவிட்டேன். வில்லனாக நடிக்க வந்து ஹீரோவானது அவரது தலையெழுத்து என்றார்.

மேலும் அவர் கூறுகையில் தனுஷ் மற்றும் சசிகுமாரை எல்லோருக்கும் ஏன் பிடிக்கின்றது என்றால் அவர்கள் இருவருக்கும் தமிழரின் முகம் இயற்கையிலேயே அமைந்துள்ளது. அதுபோல விஜய் சேதுபதி நம்ம வீட்டு பிள்ளை போல ரொம்ப இயல்பாக இருப்பதால் நான் உள்பட அவரை அனைவரும் விரும்புகின்றனர். இவர்களை போல தமிழ் முகமும், நம்ம வீட்டு பிள்ளை போன்ற தன்மையும் எனது ஹீரோ ஷபீருக்கு இருப்பதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Post a Comment

 
Top