சீனாவில் பன்றிகள் வளர்ந்து வந்த பண்ணை ஒன்றில் திடீரென தாக்கிய மின்னல் ஒன்றினால் ஒரே நேரத்தில் 170 பன்றிகள் மின்னல் வேகத்தில் கருகி பலியாகின. இந்த பன்றிப்பண்ணையில் உரிமையாளருக்கு இதனால் சுமார் £30,000 நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.



தெற்கு சீனாவில் உள்ள Hunan province என்ற பகுதியில் உள்ள  Lu Qingsheng என்பவருக்கு சொந்தமான பன்றிப்பண்ணையில் சுமார் 400 பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தன. நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பயங்கர மின்னல் ஒன்று பன்றிகள் வளர்ந்து வரும் பண்ணையை தாக்கியது. மின்னல் தாக்கிய வேகத்தில் ஹைபவர் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து சில நொடிகளில் 170 பன்றிகள் உடல்கருகி பலியாகின. 

இந்த துயர சம்பவம் நிகழ்ந்த போது இந்த பண்ணை உரிமையாளரின் மனைவி அந்த பகுதியில் ஒருசில பன்றிகளுக்கு உணவுகள் வழங்கிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் 170 பன்றிகளை இழந்ததால் அவருக்கு பெருமளவு பண நஷ்டம் உண்டானதாகவும்,  Lu Qingsheng வருத்ததுடன் கூறினார். சுமார் £30,000 வரை நஷ்டமான தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோருக்கை விடுத்துள்ளார். இந்த துயர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

 
Top