சீனாவில் உள்ள ஒரு தொழிலதிபர் குடிபோதையில் இருந்ததால் தன்னை தன்னுடைய வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்க உதவி செய்யும்படி இளம்பெண் ஒருவரை கேட்டுக்கொண்டார். அந்த இளம்பெண்ணும் தொழிலதிபருக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் மறுநாள் காலை தொழிலதிபர் எழுந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சி என்ன என்பதை பார்ப்போம்.

சீனாவில் உள்ள ஷாங்காய் என்ற நகரத்தில் பிரபல தொழிலதிபாராக இருக்கும் Ling Fu என்ற 51 வயது நபர் நேற்று இரவு ஸ்டார் ஓட்டலில் உள்ள மதுபாருக்கு சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். அவர் அளவுக்கு மீறி குடித்துவிட்டதால் நிதானம் இழந்துவிட்டார். அவரால் தன்னுடைய வீட்டிற்கு செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் அந்த பாரில் இருந்த ஒரு இளம்பெண்ணிடம் தன்னை ஜாக்கிரதையாக வீட்டிற்கு கொண்டு செல்ல உதவி செய்தால் பணம் தருவதாக கூறினார்.

அந்த இளம்பெண்ணும் தொழிலதிபரின் வார்த்தையை நம்பி அவருடைய காரில் ஏற்றி தொழிலதிபரை அழைத்து சென்றார். செல்லும் வழியில் காரிலேயே Ling Fu  போதை அதிகமானதன் காரணமாக நினைவிழந்தார். மறுநாள் காலை Ling Fu கண்விழித்து பார்க்கும்போது தான் ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் படுத்துக்கிடப்பதை உணர்ந்தார். அதுமட்டுமின்றி அவருடைய உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லை. அவர் அணிந்திருந்த துணி, செல்போன், கிரெட்டி கார்டு, மற்றும் உள்ளாடை முதல் அனைத்தையும் அந்த இளம்பெண் திருடிக்கொண்டு தன்னை குப்பைத்தொட்டி அருகில் போட்டுவிட்டு சென்றதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த குப்பைத்தொட்டியில் உள்ள ஒரு அட்டையை எடுத்து தனது மர்ம உறுப்பை மட்டும் மறைத்துக்கொண்டு நேராக காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

முதலில் யாரோ ஒரு பைத்தியம் என நினைத்த போலீசார் பின்னர் அவர் தொழிலதிபர் என்பதை அறிந்து அவருக்கு உடை மற்றும் உணவு கொடுத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் உள்ளாடை முதல் திருடிக்கொண்டு சென்ற மர்ம இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Post a Comment

 
Top