தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற திரைப்படத்திலும், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான குவீன் திரைப்படம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு இத்தாலி படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படத்தில் கங்கனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக இத்தாலி நிறுவனம் கங்கனாவுக்கு அளித்துள்ள சம்பளம் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்டு இந்தியாவின் முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பாலிவுட்டில் ‘Katti Batti’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கங்கனா ரனாவத், இத்தாலி படத்திற்காக பெருமளவு கால்ஷிட்டை கொடுத்துவிட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இத்தாலியன் இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்கி சுமார் 18 மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்துவிட்டார். இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இத்தாலியில் தங்குவதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்துவிட்டதாகவும், இன்னும் ஒன்றரை வருடத்திற்கு கங்கனாவை இந்திய மொழி திரைப்படங்களில் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

எந்திரன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் ரூ.27 கோடிதான் இதுவரை இந்தியாவில் சினிமா நடிகர் ஒருவர் வாங்கிய மிகப்பெரிய சம்பளமாக கருதப்பட்டது. இந்த சாதனையை கங்கனா ரனாவத் முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கங்கனா ரனாவத் தரப்பில் இருந்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என்றும், ஆனால் சம்பளம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top