ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Robert Bobroczky என்ற 13 வயது சிறுவன் 7’4” உயரமுள்ள பேஸ்கட்பால் விளையாட்டு வீரராக திகழ்கிறார். உலகில் மிக உயரமுள்ள பேஸ்கட்பால் வீரர் என்ற பெருமை பெற்ற Hasheem Thabeet என்பவரை விட இவர் 1"உயரமாக உள்ளார். மேலும் இவர் இன்னும் வளர்ந்து கொண்டே இருப்பதாகவும், அதிகபட்சமாக 9’9”. வரை இவர் உயரமாக வளர வாய்ப்பு இருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.
தற்போது Italian team Stella Azzura Roma என்ற அணிக்காக பேஸ்கட்பால் விளையாடி வரும் Robert Bobroczky, எதிர்காலத்தில் Spanish giants Real Madrid மற்றும் Barcelona, அணிகளில் விளையாட விரும்புவதாகவும், மேலும் அமெரிக்காவில் உள்ள NBA என்று அழைக்கப்படும் National Basketball Association நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வருடத்திற்கு 10" உயரம் அதிகமாக வளர்ந்து வரும் இவர் தனது 21வது வயதில் 9’9”வளர வாய்ப்பு இருப்பதாக இவருக்கு பேஸ்கட்பால் பயிற்சி கொடுத்து வரும் பயிற்சியாளர் தெரிவித்தார். இவர் பேஸ்கட்பால் விளையாடும்போது எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வீடியோவை கண்டுகளியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment