95 வயது மூதாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக சிறிய ரக விமானம் ஒன்றில் அழைத்து சென்றபோது, அந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி அந்த குடும்பமே பலியான ஒரு சோக சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. பிரேசில் aநாட்டில் உள்ள பால்சாஸ் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவருக்கு திடீரென உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. எனவே அந்த மூதாட்டியை தாங்கள் வைத்திருந்த சிறிய ரக விமானத்தில் ஏற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அந்த குடும்பத்தினர் முயன்றனர். அவருடன் குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்களும் சென்றனர். மூதாட்டியின் குடும்பத்தோடு சென்ற அந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமான எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் எதிர்பாராத விதமாக நொறுங்கி கிழே விழுந்தது. இந்த விபத்தில் மூதாட்டியின் குடும்பமே பலியானது. அந்த விமானம் கீழே இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.

Post a Comment

 
Top