பாகிஸ்தானுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 6ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். யுனுஸ்கானின் அபார சதத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் குவித்தது.
இதற்கு பதிலடியாக இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 533 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 221 ரன்கள் எடுத்தார்.
82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், படு சொதப்பலாக விளையாடி 80.2 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இலங்கை அணியின் ஹிராத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனால் 99ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இலங்கை அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹீராத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Post a Comment