பிரேசில் நாட்டில் உள்ள 37 வயது பெண் ஒருவர் ஒரு வயதாக இருக்கும்போது அவரது தாயார் அவரை தொலைத்துவிட்டார். தனது தாயாரை கணவரின் துணையோடு அவர் தேடினார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒருவழியாக தாயாரை கண்டுபிடித்தார். ஆனால் தாயாரை கண்டுபிடித்தவுடன் அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் கண்டுபிடித்த தாயார்தான் அவருடைய கணவருக்கும் தாயார் என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 37 வயது பெண் Leandro. இவர் தன்னுடைய கணவர் Adriana அவர்களின் துணையோடு சிறுவயதில் தொலைந்துபோன தனது தாயாரை தேடினார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் Adriana அவர்களும் சிறுவயதில் தாயை தொலைத்தவர் என்பதுதான். இருவரும் தங்களது தாயாரை தங்களிடம் இருந்த ஆதாரங்களை வைத்து தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் Adriana அவர்களின் தாயார் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவரேதான் Leandro அவர்களின் தாய் என்பது தெரியவந்தது. இதனால் இருவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணன், தங்கை உறவு முறையுள்ள இருவரும் தெரியாமல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இருவருக்கும் ஒருவரே தாயார் என்றாலும் இருவரும் வெவ்வேறு தந்தைக்கு பிறந்தவர் என்பது ஒரு ஆறுதல்.
தற்போது இருவரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிரிவதென முடிவு செய்துள்ளனர். இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் நீதிமன்றத்தின் துணை இல்லாமல் ஒருவருக்கொருவர் பிரிவதென முடிவு செய்துவிட்டனர். அவர்களது ஆறு வயது மகனை Leandro அவர்களிடம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment