அமெரிக்க நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதால் தற்போது அமெரிக்க எல்லையில் கடும் சோதனை செய்யப்படுகிறது. நேற்று அமெரிக்க - மெக்சிகோ எல்லையான போர்ட் ஆப் நோகல்ஸ் என்ற எல்லை சோதனை சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தபோது ஹோண்டா எஸ்யூவி கார் ஒன்று வந்தது.
அந்த காரை சோதனை செய்த அமெரிக்க அதிகாரிகள் ஒரு பெரிய சூட்கேஸ் இருப்பதை பார்த்தனர். சந்தேகம் கொண்ட போலீஸார் அந்த சூட்கேசின் ஜிப்பை திறந்து சோதனை செய்து பார்த்தபோது மேலோட்டமாக துணிகள் இருந்தது. துணிகள் சிலவற்றை அகற்றிவிட்டு பார்த்தபோது சூட்கேசிற்குள் இருந்து ஒரு பெண் வெளியே வந்தார். அந்த பெண்ணீற்கு சுமார் 48 வயது இருக்கும்.
விசாரணையில் அந்த பெண் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மெக்சிகோவின் கார் டிரைவர் பணத்திற்காக அந்த பெண்ணை சூட்கேசிற்குள் அடைத்துவைத்த் அமெரிக்க நாட்டிற்குள் அத்துமீறி கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment